Thursday, August 7, 2008
பூராக் விமானமும்-புண்ணாக்குகளும்.
Wednesday, August 6, 2008
புஷ்பக விமானமும் புராக் விமானமும்-மூடநம்பிக்கை
மூடநம்பிக்கை
புஷ்பக விமானமும் புராக் விமானமும்
- இனியவன்
கற்பனையையும், அறிவியலையும் முடிச்சுப் போட்டு பொய்பேசிப் புலம்பும் மதம் ஒன்று உள்ளது. அது பார்ப்பன மதம் என்ற இந்து மதம். ஏதாவது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டால் அது எங்கள் வேதங்-களில் அன்றே சொல்லப்-பட்டுள்ளது என்று புளுகுவார்கள். உதாரணத்திற்கு ஆகாய விமானத்திற்கு வேதத்தில் புஷ்பக விமானம் ஓர் புளுகாக எடுத்துக்காட்டப்பட்ட ஓர் அரிய0தொரு கட்டுரையாக உண்மை இதழ் 16-29, 2008இல் பெரியாரிடியாக இடித்துரைக்-கப்பட்டதை படித்தேன்.
இப்படிப்பட்ட புளுகு மூட்டைகள் இந்து மதத்தில் மட்டும் இன்றி, மற்ற மதங்களிலும் இந்த நச்சுக் காய்ச்சல் பரவ ஆரம்பித்-திருக்கிறது என்பதை நினைக்கும் போது வேதனை அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, மூடநம்பிக்கை அற்ற பகுத்தறிவு மார்க்கம் என்று புகழும் ஒரு சில புகழ்பாடிகளால் இஸ்லாம் மார்க்கமும் புளுகு மார்க்கமாக மாறி வருகிறது.
முகம்மது நபி கற்பனைப் பாத்திரமல்ல; அவர் ஒரு முன் மாதிரி. அதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு. அறிவியல் ரீதியான நிரூபணங்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவரை கற்பனைக் கதாபாத்திரத்தோடு ஒப்பிடுவது மடத்தனம் என்று உணர்வு பத்திரிகை அக்டோபர் 05.11.2007இல் வெளியான இராமர் விவகாரம் என்ற தலைப்பின் கட்டுரையில் டிஜே என்கிற ஆசிரியர் இந்து வெறியரான அத்வானியைச் சாடி எழுதியுள்ளார். அது ஆசிரியரின் எழுத்து ஜனநாயகம். மன்னிக்கவும், சுதந்திரம்.
எந்த மதமானாலும் அவரவர்கள் விருப்பம் போல் கதாபாத்திரத்தை அமைத்துக் கொண்டு கற்பனையாகவோ, நடந்த சம்பவத்தை நினைவூட்ட கதை, கவிதை, கட்டுரை என எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்வது அவரவர்களின் மத உரிமை. அதில் யாரும் தலையிடப் போவது இல்லை. ஆனால், அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என வாதிட்டால்தான் நாம் இங்கே குறிப்பிட்டுக் குறுக்கிட வேண்டியுள்ளது. இது அறிவியலா-ளரின் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்-பாளர்களின் உரிமை இதை யாரும் தங்கள் விருப்பத்திற்குக் கூறிவிட இயலாது. அதற்கு ஆய்வு, நிரூபித்தல் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. இது தொடர்பாக ஒரு சில கேள்விகளை நான் இக்கட்டுரையின் மூலமாக எழுப்புகிறேன்.
இராமன், இலட்சுமனன், சீதை மூவரும் அயோத்தி மாநகருக்கு புஷ்பக விமானத்தில் (?) வந்திறங்கினர் என்பதாக இராமாயணம் கூறுகிறது.
முகம்மது நபி அவர்கள் புராக் என்ற மிருக விமானத்தில் ஏறி மிஹ்ராஜ் என்கிற விண்-வெளிப் பயணம் சென்றதாக இஸ்லாம் மார்க்கத்தில் நம்பப்படுகிறது (நூல்: புகாரி, 3207).
இராமன் சென்ற புஷ்பக விமானமும், முகம்மது நபி சென்ற புராக் விமானமும் எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது?
புராக் விமானத்தில் முகம்மது நபி அவர்கள் பயணம் செய்த நிகழ்ச்சி அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்?
எரிபொருள், விமானம் இவை கண்டு-பிடிக்காத காலத்தில் மேற்கூறிய கடவுளர்களின் விமானங்கள் (புஷ்பக, புராக்) எந்த ஆற்றலின் உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது?
மேற்கண்ட இருவரின் பயணங்களில் யாருடைய பயணம் உண்மையானது? யாரு-டைய பயணம் கற்பனையானது? யாருடைய பயணம் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது? விளக்கம் தர இயலுமா மதவாதிகளால்?
இதேபோல் புராக் என்ற மிருக வாகனம் தன் பார்வை எட்டிய தூரத்தில் அது தன் குளம்பை எடுத்து வைக்கின்றது (நூல்: முஸ்லிம் 234)
அதாவது ஒரு படி எடுத்து வைக்கும் அளவு தன் பார்வை எட்டிய தூரமாம். முறையான தூர அளவு குறிப்பிடக்கூட இயலாத ஆற்றல் வாய்ந்தது தான் இறையாற்றல் என்பதை அறிந்து கொள்ளலாம்.
விஷ்ணு குள்ள வாமணன் அவதாரம் எடுத்து பூலோகம் வந்து அரசனிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டான். அரசனும் வரம் கொடுத்தவுடன் குள்ளவாமணன் வானுயர வளர்ந்தான். ஓரடியால் விண்-ணையும், ஈரடியால் மண்ணையும் மூன்றா-மடிக்கு இடமில்லாததால் தன் தலைமீது வைக்க சொன்னான் அரசன், அதனால் அசுர குலமே அழிந்ததாக ஒரு கதை உண்டு.
மேற்கண்ட இரு மதக் கருத்துகளில் என்ன வேறுபாடு இருக்கிறது?
மேற்சொன்ன இரு மத நிகழ்ச்சிகளை அறிவியல் ரீதியாக நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது? எனவே கடவுள் என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் ஆற்றல், அதாவது இறை ஆற்றலினால் தான் இவ்விரு சம்பவங்களும் நடந்ததாகக் கதை அளக்க முடியுமே தவிர, அதில் அறிவியல் உண்மை இருப்பதாக ஒருபோதும் இவர்களால் நிரூபித்துக் காட்ட முடியாது என்பது இதன்மூலம் நிரூபிக்கப்-பட்டு விட்டது.
இதற்கு எடுத்துக்காட்டாக இறை ஆற்றல் என்ற கற்பனை ஆற்றலினால் இன்றுவரை எந்த வாகனமும் விண்ணிலும், மண்ணிலும் செலுத்த முடியவில்லை என்பதே இதற்கு ஆதாரமாகும்.
1,400 ஆண்டுகளுக்கு முன் செலுத்தப்பட்ட இறைவன் (?) வாகனம் அற்புதம் என்றால், தினம் தினம் ஒரு விண்கலம் செலுத்தப்-படுவதற்கு பெயர் என்ன?
எந்த வித எரிபொருளும் இல்லாமல் விண்ணில் செலுத்தப்படுவதுதான் இறை-யாற்றல் என்றால், அதே இறை ஆற்றலினால் இன்று விண்ணில் வேண்டாம், தரையில் கூட வாகனங்களை இயக்க முடியாமல் இருப்-பதற்குப் பெயர் தான் இறை ஆற்றலா?
எனவே வேதங்கள் அறிவுரை நூல்களே தவிர அறிவியல் நூல் ஆகாது. அது போல் அதில் கூறப்படும் கருத்துக்கள், அதில் உள்ள நிகழ்ச்சிகள் யாவும் அறிவியல் தொடர்பு அற்றது என்பதே உண்மை... உண்மை... உண்மை...
எனவே புஷ்பக விமானம், புராக் விமானம் உண்மை நிகழ்ச்சியா? கற்பனையா? மூடநம்பிக்கையா? இதற்கு உரியவர்களே! அறிவியல் ரீதியாக ஆதாரத்துடன் நிரூபிக்க வாருங்கள். அல்லது அந்தக் கற்பனைக் கடவுளை நிரூபிக்கச் சொல்லி ஆதரவு தேடுங்கள். எத்தனையோ அற்புதங்களை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்து காட்டிய அந்த வல்ல இறைவனால் (?) இன்று முடியாதா என்ன?
அறிவியலுக்கு ஜால்ரா அடித்து தங்களின் வேதங்களையும், கடவுள்களையும் காப்பாற்றிக் கொள்ளும் நிலையை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் இது போன்ற பெரியாரின் பகுத்தறிவுச் சவுக்கடி இன்னும் தொடரும்...
எல்லாம் கடவுள் செயல் (?) என்ற மூடநம்பிக்கைக் கருத்துகள் வேண்டுமானால் மதவாதிகளின் போதனையாக இருக்கலாம். ஆனால், அதுதான் அறிவியல் என்ற தவறான கருத்துகளைப் பரப்பி மக்களை மடையர்-களாக்க முயற்சிக்க வேண்டாம் என இக்கட்டுரையின் மூலம் கேட்டுக் கொள்கிறேன். மீறினால் இது போன்ற பகுத்தறிவுக் கேள்வி(கணை)களுக்கு விடைகாணத் தெரியாமல் தடுமாற நேரிடும்.
Wednesday, April 30, 2008
பெண்களை தோலுரிக்கும் ஆண் வக்கிரம சிந்தைகள்
தந்தை பெரியார் அவர்கள் எந்த மதத்தையும் அங்கீகரிக்கவில்லை
.உலகில் மதங்கள் அனைத்துமே மூட நம்பிக்கையை உண்டு பண்ணுகிறது.அதனால் அவற்றை அழித்தொழிக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம்.ஆனால் தந்தை அவர்கள் எதோ இஸ்லாம் மதத்தை ஆதரித்தது மாதிரியான ஒரு மாயையை இன்று இணைய உலகில் உருவாக்கி வருகின்றனர்
.இந்து மதமும்,கிறிஸ்தவமும் எவ்வளவு கொடியது என்று உலகில் அனைவரும் அறிவர்.ஆனால் அதை விட கொடியது இந்த இஸ்லாம்.உலகில் ஜாதிக்கொடுமைகளை உலகில் அறிமுகப்படுத்தி மனிதனை கீழ்சாதிக்காரனாக பிரித்து அவமானம் செய்த கொடுமை இந்து மதத்தையே சாரும்
.கிறிஸ்தவமும் இதற்கு விதி விலக்கல்ல
.வெள்ளை,கருப்பு என்ற பிரிவுகளும்,பாதிரிக்களின் அரசியலும் அதனை சீர்குலைத்து விட்டது.ஆனால் இவைகளை எல்லாம் எடுத்து சாப்பிடும் விதமாக பெண்ணடிமை வேரை உலகில் பதித்தது இஸ்லாம்
.இன்று மதத்தின் பெயரால் மனிதனை அழித்து ஒழிப்பதில் முன்னனியில் நிற்பது இஸ்லாம்.ஆகவே இவைகள் எதுவும் யோக்கியமானவை அல்ல.இப்படி இருக்க தந்தை அவர்கள் எதோ இஸ்லாமை ஆதரித்தது போல இந்த பாஸிஸ கும்பல் அடையாளம் காட்டி தன்னை அறிமுகப்படுத்துவது வண்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.முதலாவது மதங்களை தாக்குவது என்பது அந்த மதத்தின் தாக்கங்களை குறைப்பது என்பதுதான் நோக்கமாக இருக்கவேண்டும்
.அந்த மதங்களால் மக்களுக்கு ஏற்படு கொடுமைகளை குறைக்க பாடுபட வேண்டும்.ஆனால் பெண்களை இன்றைக்கும் அடிமைகள் முக்காடிட்டு ரோட்டில் அழைத்துசெல்லும் ஒரு மதம் இருப்பதை விட அழிந்தொழிப்பது நலம்.ஆனால் அதற்காக பெண்களை தோலுரிக்கும் ஆண் வக்கிரம சிந்தைகளையும் நாம் ஆதரிக்க வில்லை
.அதுவும் கண்டிக்கப்பட வேண்டியதேSaturday, March 1, 2008
தர்மம் செய்வது அக்கிரமம்
தர்மம் செய்வது அக்கிரமம்
தர்மம் அதாவது ஏழைகளுக்குப் பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்குப் பலவித உதவிகள் செய்வது என்பதுவரை, அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாகக் கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.
எப்படியெனில், தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்குப் போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாகக் கற்பித்து 32 தர்மங்களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
அதுபோலவே, இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்குப் பிச்சை கொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது செலவு போக மீதி உள்ளதில் 40இல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு, துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால், மதத் துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும்கூட கூறப்படுகிறது.
அதுபோலவே, கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்குப் போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது.
செல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால், அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்கு சிறிதுகூட இல்லாமல் தரித்திரம், பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய, மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.
இந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார்களானால், ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்திரவு போட்டு பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்துவிட்டாரே! இவர் கடவுளுக்கும் பெரியவரா என்று கேட்கிறேன். ஆதலால் தர்மம் பிறத்தியானுக்கு பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர பணக்காரத் தன்மையைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானதல்ல.
ஏனெனில் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தான், இல்லாத ஏழை மக்களை தரித்திரவாசிகளான மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும். அன்றியும் பணக்கார மக்கள் மீது ஏழைமார்களுக்கு குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே தர்மம் என்பதும், ஜக்காத் என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய, பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.
எது எப்படி இருந்த போதிலும், உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால், பிச்சை கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே எற்றுக் கொண்டு அதற்குப் பணம் வேண்டுமானால், பணக்காரரிடம் இருந்து பிச்சை வரி என்று ஒரு வரியை கிறிஸ்து சொன்ன கணக்குப்படியோ, சர்க்கார் வசூலித்து, அதற்கு ஒரு இலாக்கா வைத்து விநியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழிற்சாலைகள் வைத்து, அதன் மூலம் பிச்சைக்காரர்களிடம் வேலையை வாங்கிக்கொண்டு விநியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்துக்காக சர்க்கார் எந்தத் தொழிற்சாலை வைக்கிறார்களோ, அந்த மாதிரி தொழிற்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்.
இப்படிச் செய்தால் பணக்காரர்கள் ஏற்பட்டு நாசமாய்ப் போனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லையாவது இல்லாமல் போய்விடும். பணக்காரத் தன்மை ஆட்சியில்லாத தேசம் எதிலும் இந்தக் காரியம் சுலபமாய் நடத்தலாம். ஆகவே, தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன்.
21.4.1945 அன்று 'குடி அரசு' இதழில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய தலையங்கம்