Thursday, August 7, 2008

பூராக் விமானமும்-புண்ணாக்குகளும்.

பகுத்தறிவுவாதிகளுக்கு சவால் விடும் அளவுக்கு தங்களை அறிவாளிகளாக காட்டிக்கொள்ள இன்றைக்கு இஸ்லாமியர்கள் தொடங்கிங்கியுள்ளனர்.
 
ஆனால் மதங்கள் மனிதனை முட்டளாக்கி அவனை காட்டுமிராண்டியாக மாற்றும் என்பதை இன்றக்கு இருக்கும் உலகின் அனைத்து மதவாதிகளும் நிருபித்து வருகிறார்கள்.அதில் இஸ்லாமும்,முஸ்லீகளும் விதிவிலக்கல்ல.
 
உண்மை அப்படியிருக்கும்போது தி.கா. வுக்கு சாவால் என்று வாய்ச்சவாடல் வேறு ஒரு கேடா?
 
பொய்யையும்,புணை சுருட்டுகளையும் மதங்களாக ஏற்படுத்திக்கொண்டு அதற்கு பகுத்தறிவு ,விஞ்ஞான முலாம் பூசும் முட்டாள்கள் தாங்கள் யாருக்கு சவால்விடுகிறோம் என்று அறிந்து சவால் விடவேண்டும்.அதை விடுத்து வெறும் சவாடல்கல் எல்லாம் இங்கு இருக்ககூடாது.
 
உங்கள் குரான் ,மற்றும் கிரந்தங்கள் அனைத்தும் பொய்,உங்கள் கிரந்தங்கள் மட்டும் அல்ல உலகில் கடவுள் பெயரில் சொல்லப்படும் அனைதும் பொய் என்பதே தந்தை பெரியார் அவர்களின்  கூற்றாகும்.
 
இஸ்லாமை தந்தை அவர்கள் ஒரு சில நேரங்களில் ஆதரித்ததுக்கு காரணம் இஸ்லாம் சரி என்பதற்காகவோ,உங்கள் கிரந்தக்குப்பைகள் சரி என்பதற்காகவோ அல்ல.இந்தியாவின் இந்து மதக்குப்பைகளை விட உங்கள் குப்பை பரவாயில்லை என்பதுதான் காரணம்.ஆனால் அது உங்களுக்கு அங்கீகாரம் அல்ல.
 
ஏதோ தி.க பயந்துவிட்டது என்பது போல் கட்டுரை எழுதுகிறிர்கள்.இன்றைக்கு சொல்லுகிறோம் தலைவர் வீரமணி அவர்கள் சென்ற மாத உண்மை இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு இஸ்லாம் சிறுபாண்மையினார் அதுமட்டும் அல்ல இந்து மதம் அளவுக்கு மூட நம்பிக்கை கிடையாது என்றே பதில் அளித்துள்ளார்கள்.
 
உங்களுக்கு முடிவாக சொல்லிக்கொள்ளுவது என்னவென்றால் பகுத்தறிவாளனை சீண்டிப்பார்த்தால் உங்களின் புரட்டுகள் சந்தி சிரிக்கவைக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
 
பகுத்தறிவுவாதி
 
 
 
 
 
 

4 comments:

said...

ஐயாவே சொன்னாலும், நல்லதையும் கெட்டதையும் பகுத்தறியும் திறன் உள்ளவன்தான் பகுத்தறிவுவாதி. வாய்ச் சவடாலுக்கும் உண்மையிலேயே விவாதத்துக்கு அழைப்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர்களை..... போமய்யா.

//இந்து மதம் அளவுக்கு மூட நம்பிக்கை கிடையாது என்றே பதில் அளித்துள்ளார்கள்.//
அந்த மூட நம்பிக்கைகளைப் பற்றித்தானய்யா விவாதிக்க அழைக்கிறார்கள். முஸ்லீம்களிடையே இஸ்லாத்தின் மூட நம்பிக்ககைகளைப் பற்றிப் பேச ஒரு அருமையான வாய்ப்பு. ஏனய்யா தவற விட வேண்டும்.

//பகுத்தறிவாளனை சீண்டிப்பார்த்தால் உங்களின் புரட்டுகள் சந்தி சிரிக்கவைக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்//
நீங்கள் சொல்வதில், செய்வதில் உண்மை உள்ளதென்றால் எதற்கு பின் வாங்க வேண்டும். அதற்காக 'சந்தி சிரிக்க வைக்கப்படும்' என்று சொல்வதுதான் பகுத்தறிவா.?

போங்கய்யா. உங்க பகுத்தறிவும் வெங்காயமும்

said...

//உங்களுக்கு முடிவாக சொல்லிக்கொள்ளுவது என்னவென்றால் பகுத்தறிவாளனை சீண்டிப்பார்த்தால் உங்களின் புரட்டுகள் சந்தி சிரிக்கவைக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

பகுத்தறிவுவாதி//

அய்யா பகுத்தறிவுவாதி,

விடப்பட்ட சவாலுக்கு பதிலைக் காணும். அதைவிட்டுவிட்டு மிரட்டும் தொணியில் பேசுவதுதான் பகுத்தறிவோ? பகுத்தறிவு என்றால் என்ன என்பதை தாங்கள் தெரிந்துக் கொள்வது நலம். பெரியாரோ அல்லது கி.வீரமணியோ கூறுவது எல்லாம் பகுத்தறிவு ஆகாது என்பதையும் புரிந்துக் கொள்ளுங்கள். எதையும் நன்கு தீர விசாரியுங்கள் ஒருவேளை உங்களின் பகுத்தறிவு வேலை செய்தாலும் செய்யும்.

நன்றி.
அப்துல் குத்தூஸ்.

Anonymous said...

www.onlinepj.com
www.onlinepj.com
www.onlinepj.com
www.onlinepj.com
www.onlinepj.com
www.onlinepj.com

Anonymous said...

நண்பரே cool cool. "பகுத்தறிவுவாதிகளுக்கு சவால் விடும் அளவுக்கு தங்களை அறிவாளிகளாக காட்டிக்கொள்ள இன்றைக்கு இஸ்லாமியர்கள் தொடங்கிங்கியுள்ளனர்"

அதெல்லம் இருக்கட்டும்,சவாலை ஏற்றுகொண்டீர்களா இல்லையா! நேரடி விவாததிக்கு சம்மதமா என்பதை கடைசிவரை கூறவில்லையே!

மற்றவர்களை போல தி.க நண்பர்களும் வெரும் எழுத்தில் மட்டும் வீரத்தை காட்டுபவர்கள் என்பதை நிருவித்துவிட்டீர், நேரடி விவாதம் என்றால் ஏன் இவ்வளவு பயம்?

"தாங்கள் யாருக்கு சவால்விடுகிறோம் என்று அறிந்து சவால் விடவேண்டும்.அதை விடுத்து வெறும் சவாடல்கல் எல்லாம் இங்கு இருக்ககூடாது."

பெரியார் சிலைக்கு மாலையிட்டு (அந்த சிலை தனக்கு மரியாதை செய்வதை அறியுமா?) வணங்கும், இறந்துபோன பெரியாரை வாழ்க என்று கோசமிடும் பகுத்தறிவுவாதிகளே!!! உங்கள் பகுத்தறிவின் லட்சணம் எல்லோருக்கும் தெரியும், so Just say Are you ready to Argument or not?

by கஜினி