Wednesday, August 6, 2008

புஷ்பக விமானமும் புராக் விமானமும்-மூடநம்பிக்கை

மூடநம்பிக்கை

புஷ்பக விமானமும் புராக் விமானமும்

- இனியவன்

கற்பனையையும், அறிவியலையும் முடிச்சுப் போட்டு பொய்பேசிப் புலம்பும் மதம் ஒன்று உள்ளது. அது பார்ப்பன மதம் என்ற இந்து மதம். ஏதாவது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டால் அது எங்கள் வேதங்-களில் அன்றே சொல்லப்-பட்டுள்ளது என்று புளுகுவார்கள். உதாரணத்திற்கு ஆகாய விமானத்திற்கு வேதத்தில் புஷ்பக விமானம் ஓர் புளுகாக எடுத்துக்காட்டப்பட்ட ஓர் அரிய0தொரு கட்டுரையாக உண்மை இதழ் 16-29, 2008இல் பெரியாரிடியாக இடித்துரைக்-கப்பட்டதை படித்தேன்.
இப்படிப்பட்ட புளுகு மூட்டைகள் இந்து மதத்தில் மட்டும் இன்றி, மற்ற மதங்களிலும் இந்த நச்சுக் காய்ச்சல் பரவ ஆரம்பித்-திருக்கிறது என்பதை நினைக்கும் போது வேதனை அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, மூடநம்பிக்கை அற்ற பகுத்தறிவு மார்க்கம் என்று புகழும் ஒரு சில புகழ்பாடிகளால் இஸ்லாம் மார்க்கமும் புளுகு மார்க்கமாக மாறி வருகிறது.
முகம்மது நபி கற்பனைப் பாத்திரமல்ல; அவர் ஒரு முன் மாதிரி. அதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு. அறிவியல் ரீதியான நிரூபணங்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவரை கற்பனைக் கதாபாத்திரத்தோடு ஒப்பிடுவது மடத்தனம் என்று உணர்வு பத்திரிகை அக்டோபர் 05.11.2007இல் வெளியான இராமர் விவகாரம் என்ற தலைப்பின் கட்டுரையில் டிஜே என்கிற ஆசிரியர் இந்து வெறியரான அத்வானியைச் சாடி எழுதியுள்ளார். அது ஆசிரியரின் எழுத்து ஜனநாயகம். மன்னிக்கவும், சுதந்திரம்.

எந்த மதமானாலும் அவரவர்கள் விருப்பம் போல் கதாபாத்திரத்தை அமைத்துக் கொண்டு கற்பனையாகவோ, நடந்த சம்பவத்தை நினைவூட்ட கதை, கவிதை, கட்டுரை என எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்வது அவரவர்களின் மத உரிமை. அதில் யாரும் தலையிடப் போவது இல்லை. ஆனால், அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என வாதிட்டால்தான் நாம் இங்கே குறிப்பிட்டுக் குறுக்கிட வேண்டியுள்ளது. இது அறிவியலா-ளரின் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்-பாளர்களின் உரிமை இதை யாரும் தங்கள் விருப்பத்திற்குக் கூறிவிட இயலாது. அதற்கு ஆய்வு, நிரூபித்தல் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. இது தொடர்பாக ஒரு சில கேள்விகளை நான் இக்கட்டுரையின் மூலமாக எழுப்புகிறேன்.
இராமன், இலட்சுமனன், சீதை மூவரும் அயோத்தி மாநகருக்கு புஷ்பக விமானத்தில் (?) வந்திறங்கினர் என்பதாக இராமாயணம் கூறுகிறது.
முகம்மது நபி அவர்கள் புராக் என்ற மிருக விமானத்தில் ஏறி மிஹ்ராஜ் என்கிற விண்-வெளிப் பயணம் சென்றதாக இஸ்லாம் மார்க்கத்தில் நம்பப்படுகிறது (நூல்: புகாரி, 3207).
இராமன் சென்ற புஷ்பக விமானமும், முகம்மது நபி சென்ற புராக் விமானமும் எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது?
புராக் விமானத்தில் முகம்மது நபி அவர்கள் பயணம் செய்த நிகழ்ச்சி அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்?
எரிபொருள், விமானம் இவை கண்டு-பிடிக்காத காலத்தில் மேற்கூறிய கடவுளர்களின் விமானங்கள் (புஷ்பக, புராக்) எந்த ஆற்றலின் உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது?
மேற்கண்ட இருவரின் பயணங்களில் யாருடைய பயணம் உண்மையானது? யாரு-டைய பயணம் கற்பனையானது? யாருடைய பயணம் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது? விளக்கம் தர இயலுமா மதவாதிகளால்?
இதேபோல் புராக் என்ற மிருக வாகனம் தன் பார்வை எட்டிய தூரத்தில் அது தன் குளம்பை எடுத்து வைக்கின்றது (நூல்: முஸ்லிம் 234)
அதாவது ஒரு படி எடுத்து வைக்கும் அளவு தன் பார்வை எட்டிய தூரமாம். முறையான தூர அளவு குறிப்பிடக்கூட இயலாத ஆற்றல் வாய்ந்தது தான் இறையாற்றல் என்பதை அறிந்து கொள்ளலாம்.
விஷ்ணு குள்ள வாமணன் அவதாரம் எடுத்து பூலோகம் வந்து அரசனிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டான். அரசனும் வரம் கொடுத்தவுடன் குள்ளவாமணன் வானுயர வளர்ந்தான். ஓரடியால் விண்-ணையும், ஈரடியால் மண்ணையும் மூன்றா-மடிக்கு இடமில்லாததால் தன் தலைமீது வைக்க சொன்னான் அரசன், அதனால் அசுர குலமே அழிந்ததாக ஒரு கதை உண்டு.
மேற்கண்ட இரு மதக் கருத்துகளில் என்ன வேறுபாடு இருக்கிறது?
மேற்சொன்ன இரு மத நிகழ்ச்சிகளை அறிவியல் ரீதியாக நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது? எனவே கடவுள் என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் ஆற்றல், அதாவது இறை ஆற்றலினால் தான் இவ்விரு சம்பவங்களும் நடந்ததாகக் கதை அளக்க முடியுமே தவிர, அதில் அறிவியல் உண்மை இருப்பதாக ஒருபோதும் இவர்களால் நிரூபித்துக் காட்ட முடியாது என்பது இதன்மூலம் நிரூபிக்கப்-பட்டு விட்டது.
இதற்கு எடுத்துக்காட்டாக இறை ஆற்றல் என்ற கற்பனை ஆற்றலினால் இன்றுவரை எந்த வாகனமும் விண்ணிலும், மண்ணிலும் செலுத்த முடியவில்லை என்பதே இதற்கு ஆதாரமாகும்.
1,400 ஆண்டுகளுக்கு முன் செலுத்தப்பட்ட இறைவன் (?) வாகனம் அற்புதம் என்றால், தினம் தினம் ஒரு விண்கலம் செலுத்தப்-படுவதற்கு பெயர் என்ன?
எந்த வித எரிபொருளும் இல்லாமல் விண்ணில் செலுத்தப்படுவதுதான் இறை-யாற்றல் என்றால், அதே இறை ஆற்றலினால் இன்று விண்ணில் வேண்டாம், தரையில் கூட வாகனங்களை இயக்க முடியாமல் இருப்-பதற்குப் பெயர் தான் இறை ஆற்றலா?
எனவே வேதங்கள் அறிவுரை நூல்களே தவிர அறிவியல் நூல் ஆகாது. அது போல் அதில் கூறப்படும் கருத்துக்கள், அதில் உள்ள நிகழ்ச்சிகள் யாவும் அறிவியல் தொடர்பு அற்றது என்பதே உண்மை... உண்மை... உண்மை...
எனவே புஷ்பக விமானம், புராக் விமானம் உண்மை நிகழ்ச்சியா? கற்பனையா? மூடநம்பிக்கையா? இதற்கு உரியவர்களே! அறிவியல் ரீதியாக ஆதாரத்துடன் நிரூபிக்க வாருங்கள். அல்லது அந்தக் கற்பனைக் கடவுளை நிரூபிக்கச் சொல்லி ஆதரவு தேடுங்கள். எத்தனையோ அற்புதங்களை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்து காட்டிய அந்த வல்ல இறைவனால் (?) இன்று முடியாதா என்ன?
அறிவியலுக்கு ஜால்ரா அடித்து தங்களின் வேதங்களையும், கடவுள்களையும் காப்பாற்றிக் கொள்ளும் நிலையை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் இது போன்ற பெரியாரின் பகுத்தறிவுச் சவுக்கடி இன்னும் தொடரும்...
எல்லாம் கடவுள் செயல் (?) என்ற மூடநம்பிக்கைக் கருத்துகள் வேண்டுமானால் மதவாதிகளின் போதனையாக இருக்கலாம். ஆனால், அதுதான் அறிவியல் என்ற தவறான கருத்துகளைப் பரப்பி மக்களை மடையர்-களாக்க முயற்சிக்க வேண்டாம் என இக்கட்டுரையின் மூலம் கேட்டுக் கொள்கிறேன். மீறினால் இது போன்ற பகுத்தறிவுக் கேள்வி(கணை)களுக்கு விடைகாணத் தெரியாமல் தடுமாற நேரிடும்.

7 comments:

said...

http://abunoora.blogspot.com/2008/07/blog-post_2033.html

http://abunoora.blogspot.com/2008/08/blog-post.html

http://abunoora.blogspot.com/2008/08/blog-post_05.html

said...

அய்யா,
வணக்கம் இந்தக்கட்டுரைக்கு மறுப்புக்கட்டுரையை இஸ்லாமியச் சகோதரர்கள் எழுதியுள்ளார்கள். அதற்கு பதிலாக நான் மறுப்பு எழுதியுள்ளேன். அதன் விபரங்களை www.thamizhoviya.blogspot.com வலைப்பதிவில் பார்த்து அறிந்து கொள்ளவும்.
நன்றி.

said...

//ABU NOORA said...
http://abunoora.blogspot.com/2008/07/blog-post_2033.html

http://abunoora.blogspot.com/2008/08/blog-post.html

http://abunoora.blogspot.com/2008/08/blog-post_05.html//


உங்களின் கொட்டம் கூடிய விரைவில் அடக்கபடும்,

said...

//தமிழ் ஓவியா said...
அய்யா,
வணக்கம் இந்தக்கட்டுரைக்கு மறுப்புக்கட்டுரையை இஸ்லாமியச் சகோதரர்கள் எழுதியுள்ளார்கள். அதற்கு பதிலாக நான் மறுப்பு எழுதியுள்ளேன். அதன் விபரங்களை www.thamizhoviya.blogspot.com வலைப்பதிவில் பார்த்து அறிந்து கொள்ளவும்.
நன்றி.//

தோழர் அவர்களே நீங்கள் எழுதிய பதிலில் எனக்கு திருப்தியில்லை.நாம் யாருடைய அச்சுறுத்தல்களுக்கு பயந்தவர்கள் அல்ல,இஸ்லாமியர்கள் ஐயா அவர்களின் கட்டுரைகளை படிக்காதவர்கள் அல்ல.அவர்களுக்கு ஆதரவான கட்டுரைகளை மட்டும் அவர்கள் போற்றிக்கொள்ளுவார்கள்.மற்றவற்றை அவரகள் கண்டு கொள்ளமாட்டார்கள்.மதவாதிகள் அனைவருமே நச்சுப்பாம்புகள் தான்.

Anonymous said...

ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் மரணித்து விட்டார். அவர் அடக்கம் செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாகி விட்டார் என்பது வரலாற்று உண்மை. அறிவியல்பூர்வமாக நிரூபிக்க அறைகூவல் விட்டால் அதை நிரூபிக்க முடியும்.

ஆனால் பகுத்தறிவின் மொத்த குத்தகைதாரர்கள் பெரியாருக்கு நாடெங்கும் சிலைகளை நிறுவியுள்ளனர். இரும்பு, செம்பு, பாறை போன்றவற்றை பெரியாரைப்போல் செதுக்கி வைத்துள்ளனர். அந்தச் சிலைகளின் பீடத்தில் பெரியார் என்று எழுதியும் வைத்துள்ளனர்.

எதற்கெடுத்தாலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிவரும் பகுத்தறிவு கொழுந்துகளிடம் இதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்குமாறு அறைகூவல் விடுக்கிறோம்.

பெரியாரின் வெண்கலச் சிலையையும், பெரியார் எதிர்த்த இந்துக் கடவுள்களின் வெண்கலச் சிலையையும் உலகில் உள்ள எந்தச் சோதனைக் கூடத்திலாவது சோதித்துப் பார்த்து இது பெரியார் வெண்கலம், இது சாமி சிலையின் வெண்கலம் என்று வீரமணி வகையறாக்கள் நிரூபித்துக் காட் டுவார்களா?

பெரியாரின் கற்சிலையையும், அதே கல்லால் ஆன அம்மிக் குழவியையும் அறிவியல்பூர்வமாக சோதித்தால் இரண்டும் ஒன்று என்ற முடிவுதான் கிடைக்கும்.

இது பெரியார் எனக் கூறுவதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை என்று தெரிந்து கொண்டே பெரியார் சிலை நிறுவு வது எந்த வகையான பகுத்தறிவு?

பொது இடங்களில் இத்தகைய சிலைகளை நிறுவுவதால் மக்களுக்கு இடையூறு தவிர எந்தப் பயனும் இல்லை என் பதையும், பொருள் விரயம் என்பதையும் அறியாத இவர்கள் எப்படி தம்மை பகுத்தறிவுவாதிகள் எனக் கூறிக்கொள்கிறார்கள்?

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல்!

உண்மை இதழில் வெளியான செய்திக்கு பதிலடி

www.onlinepj.com

Anonymous said...

http://pdmfriends.blogspot.com/

said...

//தோழர் அவர்களே நீங்கள் எழுதிய பதிலில் எனக்கு திருப்தியில்லை//

அன்புத்தோழருக்கு வனக்கம்.
யாரையும் திருப்திப்படுத்துவதற்காக பெரியாரோ பெரியார் தொண்டர்களோ இதுவரை எழுதியதில்லை.

உண்மையையை மட்டுமே எழுதுபவர்கள். நீங்கள் உட்பட.

அய்யம் எழுப்புவர்களின் அய்யத்தைப் போக்க வேண்டியது நமது கடமை. ஒவ்வொரு கூட்டத்திலும் பெரியார் மற்றவர்களைக் கேள்வி கேட்க விட்டு அதற்கு உரிய பதிலை அங்கேயே அளிப்பார். இது அவருடைய வழக்கமான செயல்.

நானும் இஸ்லாமியத்தோழர்கள் எழுப்பிய அடிப்படையான கேள்விகளுக்கு மட்டும் உரிய முறையில் பதில் அளித்துள்ளேன்.

பயம் என்பது கறுப்புச்சட்டை எப்போது போட்டேனோ அப்போதே போய்விட்டது.

மிகபெரிய கொடுமையான சட்டங்களையும், பல சிறைச்சாலைகளையும் பார்த்தவர்கள்தான் பெரியார் தொண்டர்கள்.

மற்றவர்கள் எழுதுவது போல் நாமும் நாகரிக குறைவாக எழுதாமல் அவர்களுக்கு உண்மையை உணர்த்தும் வகையில் எழுத வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

நன்றி அய்யா. தொடர்ந்து எழுதுங்கள். பெரியாரியமே சமுதாய நோய்க்கான சரியான மருந்து.